ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றிய மாணவர்கள்!
மாத்தளை பிரபல பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக இணையத்தில் வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு மாணவர்களை மாத்தளை பொலிஸார் இன்று (12) கைது செய்துள்ளனர்.
ஆசிரியையின் புகைப்படத்தை கணினி மூலம் ஆபாசமாக மாற்றம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக அதே பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வருட பயிற்சிக்காக வந்த நடன ஆசிரியை
கைதான மாணவர்கள் மாத்தளை ஹுலங்கமுவ மற்றும் வாரியபொல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொல்கொல்ல மகாவலி கல்வி பீடத்தைச் சேர்ந்த குறித்த ஆசிரியை, ஒரு வருட பயிற்சிக்காக மாத்தளை கல்லூரி ஒன்றில் நடன ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.
தனது புகைப்படத்தில் முகத்தை கணினி மூலம் வெட்டியெடுத்து நிர்வாண புகைப்படம் ஒன்றுடன் இணைத்து முகநூலில் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஆசிரியை மாத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இரு மாணவர்களை கைது செய்துள்ளனர்.
காவலில் வைக்கப்பட்ட இரு மாணவர்களும் மாத்தளை சிறுவர் நன்னடத்தை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, நன்னடத்தை அறிக்கைகளுடன் மாத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.