23,270 குற்றச்சாட்டுகள் ; ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு இன்றிரவு வரப்போகும் தீர்ப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பு இன்று(22) இரவுஅறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
அனைத்து வாதங்களும் நிறைவடைந்துள்ளதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கான தண்டனை விவரங்கள் இரவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான சூத்திரதாரி
ஈஸ்டர் கொடூரத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவுஃபர் மௌலவியே என கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர், கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்குச் சதி செய்தல் , மற்றும் தாக்குதல்களுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்ட 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.