ஆலோசனை சேவை மையத்தில் சிகிச்சை பெறும் மாணவர்கள்
பேராதனைப் பல்கலைக்கழக ஆலோசனை சேவை மையத்தில் சிகிச்சை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு கடந்த மூன்று மாதங்களில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விசேட மையத்தில் இருந்து ஆலோசனை சேவைகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் சில மாணவர்களும் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளால் சில மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்குள் பதிவாகும் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் விரைவாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உறுதிப்படுத்தினார்.