ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ; ஜனாதிபதியிடம் சென்ற அறிக்கை
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மகன் உள்ளட்டவர்கள் அந்த தாக்குதலை நடதியதாக கூறப்பட்ட நிலையில், சம்பவம் குறித்தி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, சம்பவத்தை கண்காணித்து உண்மைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரித்தது.
இதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண் டோவுக்கு எந்தவிதமான செல்வாக்கும் இல்லை என்பதை அவதானித்ததாக குழு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து உண்மைகளையும் கருத்திற்கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவார் என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.