யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு அதிபர் செய்யும் அலங்கோலம்!
யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லுாரியில் AL கலைப்பிரிவில் ஆங்கில இலக்கியத்தை ஒரு பாடமாகத் தெரிவு செய்த மாணவர்களுக்கு அந்தப் பாடத்திற்கு தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை எனத் தெரியவருகின்றது.
இதனால் அந்த பாடத்தை தெரிவு செய்த மாணவர்கள், ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் தகுதியாக ஆசிரியர்கள் உள்ள வேறு பாடசாலைகளுக்கு செல்வதற்கு முயன்றுள்ளார்கள்.
இருப்பினும், மாணவர்கள் அவ்வாறு பாடசாலையை விட்டு செல்லாமல் தடுத்த கொக்குவில் இந்துக்கல்லுாரி அதிபர், குறித்த பாடத்திற்கு பொருத்தமான பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்காது பயிற்றப்பட்ட ஆசிரியர்களை கற்பிக்க நியமித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கடும் விசனத்தை தெரிவித்துள்ளார்கள்.
ஏ.எல் பரீட்சையில் ஆங்கில இலக்கியத்தை தெரிவு செய்து கற்கும் மாணவர்கள் இலகுவாக பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாணவர்களின் பல்கலைக்கழகம் செல்லும் கனவை கொக்குவில் இந்துக்கல்லுாரி அதிபர் நிர்மூலமாக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றாரா என்று பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.