இந்திய கொடியுடன் உக்ரைனை விட்டு தப்பி ஓடிய மாணவர்கள்
உக்ரைனில் சிக்கித் தவித்த பாகிஸ்தான், துருக்கி நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி பாதுகாப்பாக உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர்.
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்கள், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்படுகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகருக்கு வந்தடைந்த இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக எல்லையை கடக்க தங்களுக்கும் பாகிஸ்தான், துருக்கியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்திய தேசியக் கொடி பெரிதும் உதவியாக கூறினர்.
இதனபோது இந்தியர்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி தயக்கமின்றி எல்லைக்கு செல்லலாம் என இந்திய தூதகரகம் அறிவுறுத்தியதைடுத்து, சந்தைகளில் இருந்து ஸ்ப்ரே பெயிண்டுகளை வாங்கி திரைச்சீலையையை வெட்டி மாணவர்கள் இந்திய தேசியக் கொடியை தயாரித்துள்ளனர்.
அதனை பயன்படுத்தி இந்திய மாணவர்களும் பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் பாதுகாப்பாக எல்லையைக் கடந்து புகாரெஸ்ட் சென்றடைந்துள்ளனர்.