இலங்கையில் மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்களுக்கு நேர்ந்த கதி!
கல்வி பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவனை அடிவயிற்றுப் பகுதியில் உதைத்து இரத்தக்கசிவு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனுடன் பரீட்சைக்கு தோற்றிய சக மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (02-06-2023) பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சிறுநீர் பாதையில் இருந்து இரத்தம் வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முறைப்பாடு தொடர்பில் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என முறைப்பாட்டாளரின் கோரிக்கையின் காரணமாக கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.