யாழில் கிணற்றில் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்!
யாழ்.பகுதியில் நண்பர்களுடன் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் யாழ். சுழிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் மூளாயை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற குறித்த மாணவன், நேற்று மாலை தனது நண்பர்களுடன் சுழிபுரம் திக்கரைப் பகுதியிலுள்ள அமைந்துள்ள கிணற்றில் நீராடிய வேளையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நீரில் மூழ்கிய மாணவன் ஆபத்தான நிலையில் மீட்டு மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மாணவன் மூளாய் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.