திடீரென உயிரிழந்த மாணவன்: யாழில் பெரும் சோக சம்பவம்
தொல்புரத்தில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மகிந்தன் என்ற 17 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு நித்திரைக்கு சென்ற மாணவன், இன்று காலை உடல்நிலையில் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.