இலங்கை முழுவதும் பலமான அரசியல் சக்தி ஒன்று உருவாக்கப்படும்! ஜீ.எல்.பீரிஸ்
இலங்கை முழுவதும் பலமான அரசியல் சக்தி ஒன்று உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் (G.L.Peiris) கூறுகிறார்.
அவரும், டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) உட்பட அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று நரடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தனர்.
இதேவேளை, 109 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலும் 115 பேர் ஆளும் கட்சியிலும் அமர்ந்துள்ளதாக நாடாளுமன்ற நூலக பதிவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சிக்கு தற்போது 103 எம்.பி.க்கள் உள்ளதாக தெரிவித்தார்.
இந்தக் குழுவில் பொதுஜன பெரமுனவின் 43 உறுப்பினர்கள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.