இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!
இலங்கை அரசாங்கம் அதி சக்திவாய்ந்த மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி மக்களின் இரகசியங்களைத் தேடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை மீதான விவாதத்தின்போதே அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து மேலும் குறிப்பிட்ட அவர்,
”பெகாசஸ் என்ற மென்பொருளை அரசாங்கம் பெற்றுள்ளது. அந்த மென்பொருள் மிக ஆபத்தானது.
அதன்மூலம் உங்கள் கைபேசி கமராவை ஒன் பண்ண முடியும். இருக்கும் இடத்தை அறிய முடியும். இந்த அரசாங்கம் உங்கள் விடயங்களை தேடுகிறது.
இதனுடன் நீங்கள் தொடர்புபட்டால் இந்த ஆட்சி கவிழும் என்பதை ரி.ஆர்.சி பணிப்பாளர், டயலொக், மொபிட்டலுக்கும் கூறிக்கொள்கிறேன்.” என்றார் ஹரின் பெர்னாண்டோ