சிவனொளிபாத மலைக்கு பிளாஸ்டிக் குப்பைகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை
சிவனொளிபாத மலையில் குவியும் பிளாஸ்த்திக் குப்பைகளை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்தவுள்ளதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சிவனொளிபாத மலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை என தெரிவித்தார்.

இதற்காக வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, யாத்திரிகர்களால் சிவனொளிபாத மலையில் கைவிடப்படும் அனைத்து பிளாஸ்த்திக் பொருட்களும் சேகரிக்கப்பட்டு முறையாக அகற்றப்படும் என தெரிவித்தார்.
2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிவனொளிபாத மலையை பிளாஸ்த்திக் பொருட்களின் தாக்கத்தில் இருந்து கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.