யானைகளுக்கு உணவளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!
வனப்பிராந்தியங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவழித்தால் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாடு தாவர பாதுகாப்புச் சட்டத்திற்கமைவாக சட்டத்திற்கெதிரான செயன்முறை எனவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.
அத்துமீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வனப்பிராந்திய வீதிகளில் பயணிக்கும் பயணிகள் உணவு வழங்குவதால் காட்டு யானைகள் சுற்றித்திரிவதாகவும் இதன் விளைவாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதனாலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை , யானைகள் அத்துமீறி கிராமங்களுக்குள் உள்நுழைவதனைத் தடுப்பதற்காக மின்வேலிகள் அமைக்கும் போது வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள தொழிநுட்பக் குறிப்புகளுக்கமைவாக அமைக்க வேண்டும் எனவும் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பாதுகாப்பற்ற மின்வேலிகளில் சிக்குண்டு தேக்க மகா ஏத்தா என்ற 4 அடி நீளமுள்ள ஜோடித் தந்தங்களுடன் நேற்றைய தினம் (26.07.2023) திக்வெவ காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.