தென்னைமரத்தில் கைவைத்தால் கடும் நடவடிக்கை!
நாட்டில் உரிய அனுமதியின்றி தென்னை மரம் வெட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை தேயிலைக்கு சர்வதேச சந்தையில் சிறந்த கேள்வி உள்ளதுபோல இஅல்ங்கை தேங்காய்க்கும் சர்வதேச சந்தையில் சிறந்த கேள்வி உள்ளதாக தெரிவித்த அவர், எமது பொருளாதாரத்துக்குப் இது பெரும் பலமாக அமையும் எனவும் கூறினார்.
தேயிலை தொழில்துறைக்கு நிகரான வருமானத்தை தென்னை மூலமும் ஈட்ட முடியும். மரம் வெட்டுதல் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்குள் தென்னை மரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கான ஏற்பாடுகள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறிய அமைச்சர், இனி கிராம சேவகர், பிரதேச செயலாளரின் அனுமதியின்றி தென்னை மரம் வெட்ட முடியாது எனவும் கூறினார்.
அதனை மீறி தென்னை மரம் வெட்டினால் பொலிஸார் சம்பவம் தொடர்பானவர்களை கைது செய்ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.