நிதி கொள்கையை வலுவாக்குங்கள்...அறிவுரை வழங்கிய சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாணயக் கொள்கையை வலுப்படுத்தவும் வரிகளை உயர்த்தவும் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. பொருளாதார மந்தநிலையால், எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு என நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கடனைச் சமாளிக்கவும், பணவீக்கத்தை எதிர்த்துப் போராடவும் தேவையான நிதி உதவிகளை வழங்குவதை உறுதிசெய்ய, பணவியல் கொள்கையை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் துறையின் நிர்வாக இயக்குநர் கூறினார்.
இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு இடையில், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நாட்டிற்கு நிதியளிப்பது தொடர்பாகப் பேச்சு நடத்தியதை அடுத்து, இந்த அறிக்கை வந்துள்ளது.