திரை மறைவில் ஆட்சி மாற்றத்திற்கு வியூகம்! களத்தில் முன்னாள் ஜனாதிபதி
2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சில எதிரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே அவர் இதற்கான வியூகத்தை வகுத்துவருவதாகவும் குறப்படுகின்றது.
இதற்காக , இரகசிய பேச்சுகள்கூட இடம்பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது. களுத்துறை மாவட்டத்தில் உள்ள அரசியல் பின்புலம் கொண்ட ஒருவரையே சந்திரிக்கா அம்மையார் இலக்கு வைத்துள்ளார் எனவும், தமிழ் பேசும் மக்களின் ஆதரவை பெறும் வகையிலுமே அந்த நபரை சந்திரிக்கா, தெரிவு பட்டியலில் முன்னிலையில் வைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அதேவேளை 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு சந்திரிக்கா அம்மையாரே, திரைமறைவில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.