காஸ் அடுப்பை பற்றவைத்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
அகலவத்தை, கூடலிகம பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபப் பெண்ணொருவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு உணவு சமைப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்த போது கா பெண்ணின் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எரிவாயுக் கசிவு
கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிவாயு அடுப்பில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அது குடியிருப்பாளர்களுக்கும் தெரியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் எரிவாயு குழாயில் இருந்து எரிவாயு கசிந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்
அகலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.