திருட்டு வாகனம் சிக்கியதால் முன்னாள் எம்.பி தப்பியோட்டம்
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ ஜீப் வண்டி, பாகங்களாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைபற்றப்பட்ட வாகனம் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் எம்.பி தப்பியோட்டம்
சம்பவத்தை அடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதால், சம்பந்தப்பட்ட வாகனம் தொடர்பாக வாக்குமூலம் பெற விசாரணை அதிகாரிகளால் முடியவில்லை.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் இணைந்து இந்த வாகனத்தை பாகங்களாக பிரித்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.