கோவிலில் களவுபோன காசுமாலை; சந்தேக நபர்களுக்கு வலைவீச்சு
கண்டியில் உள்ள ஒரு இந்து கோவிலில் பணத்தால் செய்யப்பட்ட மாலையை இரண்டு பேர் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் சந்தேகநபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
கண்டி நிட்டவெல வீதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
காணொளியில், இரண்டு ஆண்கள் பிரார்த்தனை செய்வது போல் நடித்து கோவிலுக்குள் நடந்து செல்வதையும், அருகில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, அவர்கள் ஒரு சிலையிலிருந்து மாலையை அகற்றுவதையும் காணலாம்.
ஒரு நபர் தனது டி-ஷேட்டுக்குள் மாலையை மறைத்து வைத்துவிட்டு இருவரும் கோவிலை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.