பயிற்சி முகாமில் துப்பாக்கிச்சூட்டில் பலியான STF அதிகாரி ; பெரும் குழப்பத்தில் பொலிஸார்
களுத்துறையில் கட்டுகருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சந்தேகம்
35 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரியின் சடலத்திற்கு அருகிலிருந்து துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.