பாடசாலை மாணவர் தகராறை தீர்க்க STF இற்கு அழைப்பு
ஹொரணை நகரில் பல நாட்களாக பல்வேறு குழுக்களாக பிரிந்து மாணவர்கள் இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்றுவந்த தகராறை கட்டுப்படுத்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஹொரணை பஸ் நிலையத்திற்கு இன்று (23) திடீரென வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் , மாணவர்களிடையே ஏற்பட்ட நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பாடசாலை முடிந்து சீருடையில் நகரத்திற்கு வரும் மாணவர்கள், நிற ஆடைகளை அணிந்துகொண்டு நகரத்தில் உள்ள மற்ற மாணவர்களைத் தாக்குவதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, நேற்று (22) கடை ஒன்றின் முன்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டது, இது தொடர்பாக ஹொரணை தலைமையக பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கபப்டுவருவதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.