நாடாளுமன்ற உணவகத்தில் உணவு விலை அதிகரிப்பு
நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும் கட்டணத்தை 1,550 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சபை குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என அந்த குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

இதுவரையில் காலை உணவுக்காக அறவிடப்பட்டுவந்த 100 ரூபாய் கட்டணம் 600 ரூபாவாகவும், மதிய உணவுக்கு அறவிடப்பட்ட 300 ரூபாய் 1,200 ரூபாவாகவும், தேநீருக்கான கட்டணம் 50ரூபாவிலிருந்து 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இதுவரையில் காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீருக்காக அறவிடப்பட்டுவந்த, 450 ரூபாய் கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        