ஒருவர் இடமாற்றம் - ஒருவர் பதவி விலகல்; மூவர் வரவில்லை; அரச வைத்தியசாலை ஒன்றின் அவலநிலை!
களுத்துறை - மத்துகம கட்டுகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுகவீனம் காரணமாக கடமைக்கு சமூகமளிக்கவில்லை என கூறப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு தங்கி சிகிச்சை கெறும் நோயாளிகளுக்கான சிகிச்சையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் இடமாற்றம் - மற்றவர் பதவி விலகல்
குறித்த வைத்தியசாலையில் 5 வைத்தியர்கள் இருந்து வந்த நிலையில் அவர்களில் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மற்றவர் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். ஏனைய இரண்டு வைத்தியர்கள் நோய்வாய்ப்பட்டு விடுமுறையில் உள்ளனர்.
இதேவேளை, 9 நாட்களாக இரவும் பகலும் தொடர்ச்சியாக நான்கு வைத்தியர்களின் சேவையை மேற்கொண்ட பிரதம வைத்தியர் ரஞ்சித் திஸாநாயக்கவும் சுகவீனமடைந்து நேற்று (16) நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் காரணமாக வெளிநோயாளிகள் பிரிவில் மட்டும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி, மத்துகம கட்டுகஹஹேன வைத்தியசாலையில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.