நடிகர் ரஜினிகாந்த உடல்நிலைக் குறித்து வெளியான அறிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலைக் குறித்து வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த அவர்கள் நேற்றைய தினத்தில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியடைந்து. இந்த நிலையில் வருடம்தோறும் இடம்பெறும் முழு உடல் பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலைக் குறித்து காவேரி வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில்,
'நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
