மறைந்த இசையமைப்பாளர், பாடகர் தேவாவிற்கு அரச மரியாதை!
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75), மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (17) காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இசையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், தேவாவின் இறுதிச் சடங்கிற்கு அரச மரியாதை வழங்கப்படும் எனத் முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேவாவின் இறுதிச் சடங்கிற்கு அரச மரியாதை
அதன்படி, தேவாவின் இறுதிச் சடங்குகள் நாளை மாலை நடைபெறவுள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவுச் செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, கமல்ஹாசனும் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை
இசையமைப்பாளர் தேவா பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் காலமானார். வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.