சீமானை பழிவாங்கும் ஸ்டாலின் அரசு ; சர்ச்சையை ஏற்படுத்திய சமூக வலைத்தளப்பதிவு
சீமானை பழிவாங்க ராஜீவ் கொலையில் பாதிக்கப்பட்ட ஒருவரை ஸ்டாலின் அரசு பயன்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்த விடயம் தொடர்பில் சமூகவலைத்தளப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது ஒரு அதிகாரி அவரை மிகவும் தாக்கினார். அப்போது திமுக தொண்டர் ஒருவர் ஸ்டாலினை காப்பாற்றி தான் உயிர் துறந்தார்.
அந்த அதிகாரி ஸ்டாலினை அப்படி கொடூரமாக தாக்கியதற்கு அவரது குடும்ப பெண் ஒருவர் ஸ்டாலினால் பாதிக்கப்பட்டதே காரணம் என அப்போது பேசப்பட்டது.
அன்றைய தமிழக அரசு ஸ்டாலினை பழி வாங்குவதற்கு அவரால் பாதிக்கப்பட்ட அதிகாரி ஒருவரை எப்படி பயன்படுத்தியதோ, அதேபோன்று இன்று சீமானை பழிவாங்க ராஜிவ் கொலையில் பாதிக்கப்பட்ட ஒருவரை ஸ்டாலின் அரசு பயன்படுத்தியுள்ளது.
காலம் மீண்டும் மாறும். ஆட்சிகளும் மாறும். அப்போது இதே காவல்துறை அதிகாரிகள் மூலம் , நடிகை சிறீரெட்டியை வைத்து உதயநிதியை அசிங்கப்படுத்த முடியும். பாத்திமாபாவுவை வைத்து ஸ்டாலினையும் அசிங்கப்படுத்த முடியும்.
எனவே இந்த மாதிரி கீழ்த்தரமான வேலைகள் மூலம் சீமானை அசிங்கப்படுத்தி, அதன் மூலம் தமிழ்த் தேசியம் வளர்வதை தடுத்துவிட முடியும் என நினைக்க வேண்டாம் எனவும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.