கடந்த ஆட்சியில் அதிமுக செய்யாததை தற்போது செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்
2016-ல் ஆளுநராக பதவியேற்றபோது ஒரு சம்பவம் நடந்தது. இந்த விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினுக்கு 3வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், வழக்கமாக இதுபோன்ற பதவி ஏற்பு விழாவில் முதல்வர், துணை அமைச்சர், மற்றும் சீனியர் அமைச்சர்களுக்கு பிறகு எதிர்க்கட்சித்தலைவரை மேடைக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கவேண்டும். ஆளுநர் பதவியேற்பு.. உள்நோக்கம் இருப்பதாக கூறி வராமல் போன காங்கிரஸ்.. புறக்கணித்த இடதுசாரிகள் அதிருப்தி ஆனால், அன்றைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை, விழாவில் அப்படி அழைக்கவில்லை.
இதுகுறித்து ஸ்டாலினும் கோபித்துக்கொண்டதாக செய்திகள் வந்தன. அந்த ப்ரோட்டாகாலை சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று ஸ்டாலின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 3 வது வரிசையில் ஸ்டாலின் அமர்த்தப்பட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.. காரணம், அமைச்சர்களுக்கு அடுத்துத்தான் எதிர்க்கட்சித்தலைவர் வருவார்... அதனால் அவருக்குதான் முன்னுரிமையும் தரப்பட்டிருக்க வேண்டும். ஆளுநர் மாளிகை 2016-ல் சென்னை ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதி தகில்ரமானி பதவி ஏற்பு விழா நடந்தது.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஆளுநராக பன்வாரிலால் முன்னிலையில் இந்த விழா நடந்தது. அப்போது தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முதல்வரிசை இதில் முதல் வரிசையில் அமைச்சர்களுக்கும், 2வது வரிசையில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு 3வது வரிசையில்தான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதுவும் இடநெருக்கடியால் நீதிபதிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். அதன் பின்னர் ஆளுநர் தலைமை நீதிபதியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்திருந்தது வேறுவிஷயம்.
திமுக இதேபோல, 2016ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்பு விழாவிற்கும் திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி முக ஸ்டாலினும் அன்றைய தினம் கலந்து கொண்டார்.. எங்கோ பின்சீட்டில் இடம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.. எந்தவித அதிருப்தியையும் வெளிப்படுத்தி கொள்ளாமல் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து ஸ்டாலின் அமர்ந்தார்.
அதிமுக ஆனால் அதை பற்றி வெளியே எதுவும் சொல்லவில்லை.. அதிமுக குறித்து கருத்தும் எதுவும் தெரிவிக்கவில்லை.. ஆனால், ஸ்டாலின் உட்கார்ந்திருந்த அந்த போட்டோக்கள் அப்போது பேசுபொருளாக உருவெடுத்தன. இதுவா அரசியல் நாகரீகம்? என்று பலரும் சோஷியல் மீடியாவில் வறுத்தெடுத்தனர். விளக்கம் அதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் செய்ய தவறிய மரபுகளை எல்லாம், தற்போதைய திமுக ஆட்சி சரியாக செய்து வருகிறது.
கடந்த காலங்களில் தாங்கள் சந்தித்த அவமானங்களை எல்லாம், இன்றைய அதிமுக வை நேரடியாக சந்திக்க விடாமல் தடுத்தும், அதேசமயம் கண்ணியத்தையும் திமுக ஆட்சி காத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவரை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பது ஒரு மரபு என்பதைகூட மறந்து செயல்பட்ட அன்றைய அதிமுகவுக்கு, நாகரீக பாணியிலேயே, நயமாக இன்று பாடம் கற்பித்துள்ளார் கருணாநிதி மகன் முதல்வர் ஸ்டாலின்..! முதல்வர் ஸ்டாலின் இதற்கு பிறகு திமுக 10 வருடங்கள் கழித்து ஆட்சியை பிடித்தது. எனினும் கடந்த கால சம்பவங்கள் எதையும் இதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல், முதல்வர் ஸ்டாலின், தான் பொறுப்பேற்றது முதல் அதிமுகவினரிடம் நட்பு பாராட்டி வருகிறார்.
முதல்வராக பதவியேற்றபோது, முன்வரிசையில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி 2 பேரையும் உட்கார வைத்து தன்னுடைய நாகரீகத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆட்சியில் 10 வருடங்கள் செய்த விமர்சனங்களை மனதில் வைத்து கொள்ளாமல், ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் அதிமுகவை கவுரவித்தது, பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டது.
பதவியேற்பு விழா இன்றைய தினம் ஆளுநர் பதவியேற்பு விழாவில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார். 8 வது வரிசையில் அவர் அமர வைக்கப்பட்டிருந்தார். எயாருடனும் பேசாமல் செல்போனில் எதையோ கவனித்து கொண்டிருந்தார்.. பிறகு பதவியேற்பு விழா முடிந்தநிலையில், ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்க மேடைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
அவரை ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அரசியல் நாகரீகம் அதாவது, அதிமுக ஆட்சியில் செய்ய தவறிய மரபுகளை எல்லாம் திமுக ஆட்சி சரியாக செய்து வருகிறது..
கடந்த காலங்களில் திமுக தான் சந்தித்த அவமானங்களை, இன்றைய அதிமுக நேரடியாக சந்திக்க விடாமல் தடுத்தும், அதேசமயம் கண்ணியத்தையும் காத்து வருகிறது.
எதிர்க்கட்சி தலைவரை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பது ஒரு மரபு என்பதைகூட மறந்து செயல்பட்ட, அன்றைய அதிமுகவுக்கு நாகரீக பாணியிலேயே, நயமாக இன்று பாடம் கற்பித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.