பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கையர்: மகளுக்காக எழுதிய உருக்கமான பாடல்!
அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த இலங்கையர் தனது மகளுக்காக முன்னர் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார் என தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியா நகரமான Perth-யில் இந்திகா குணத்திலகா (40) என்பவர் மனைவியை பிரிந்து தனது இரு பிள்ளைகளான கோஹன் (6) மற்றும் லில்லி (4) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு, குணத்திலகாவும் தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை , தற்கொலை செய்துக் கொண்ட குணத்திலகா மிகுந்த மன அழுத்தம் மற்றும் மன கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார் என தெரியவந்துள்ளது. தனது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த அவர் தனது மகள் லில்லிக்காக பாடல் ஒன்றை எழுதி முன்னர் பாடியிருக்கிறார்.

இருப்பினும், குணத்திலகாவுக்கு பாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அந்த பாடலுக்கு You’re My Girl என தலைப்பு வைத்திருக்கிறார். நான் உன்னை ஒருபோதும் சந்திக்கவில்லை, ஆனால் பிரபஞ்சத்திற்கு வேறு திட்டங்கள் இருந்தன.

மேலும், உன் சகோதரனை விட நான் உன்னை அதிகமாக நேசிக்கவில்லை, ஆனால் பலரும் சொல்வது உண்மைதான். நீ என்னை அப்பா என அழைப்பதை கேட்கும் போது முகத்தில் ஒரு புன்னகை உருவாகும்.
நீ என் பெண் (மகள்) என் இளவரசி என் அன்புக்கு உரியவள் போன்ற வரிகளின் மூலம் தன் மகள் மீதான தனது அன்பை குணத்திலகா வெளிப்படுத்தியுள்ளார். இந்தளவுக்கு மகளை நேசித்த அவரே லில்லியை கொன்றுவிட்டு உயிரை மாய்த்து கொண்டது காலத்தின் கோலம் தான்!