இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இஸ்லாமபாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் இராணுவப் படைகளை நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றும் மொஹ்சின் நக்வி நேற்று ( 13) செனட்டில் நேரடி விளக்கமளித்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பாகிஸ்தான் இராணுவம், பாதுகாப்பு வீரர்கள் மற்றும் இஸ்லாமாபாத் பொலிஸார் இணைந்து இலங்கை அணிக்கான பாதுகாப்பை கூட்டாக நிர்வகித்து வருவதாக அவர் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அரச விருந்தினர்களைப் போலவே அதே நெறிமுறையுடன் நடத்தப்படுகிறார்கள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தீவிர இராஜதந்திர ஈடுபாட்டிற்குப் பிறகு இலங்கை தனது சுற்றுப்பயணத்தைத் தொடர முடிவு செய்ததாக நக்வி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.