இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடை..! வெளியான இரகசிய சதித்திட்டம்
இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் (10.11.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரகசிய சந்திப்பு
நேற்றைய (09.11.2023) நாடாளுமன்ற விவாதத்தின் பின் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் இரகசிய சந்திப்பொன்றை ஹோட்டலில் நடத்தியுள்ளனார்.
இந் சந்திப்பின் போதே குறித்த சதி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்றுகின்றது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஷாவிடம் கோரிக்கை விடுத்து இந்த தடையை மேற்கொள்வோம் என்று அங்கு பேசப்பட்டுள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர்
போட்டியின் தோல்விக்கு அணிக்கு வெளியில் நடந்த சதியே காரணம் என கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியினை தான் பொறுப்பேற்பதாகவும் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் , வீரர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை என்றும் இதற்குப் பின்னால் குறிப்பிட்ட குழுவொன்றின் சதி இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் 02 நாட்களில் வெளியிடப்படும் என கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.