லண்டன் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கம்!
கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 விமானம், ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரச்சினை
வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 04:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.
பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், விமானங்கள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.