ஸ்ரீலங்கன் விமான சேவை BLR ஒப்பந்தம்; அமைச்சரவை அனுமதி
இந்தியாவின் பெங்களுர் (BLR) விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான பயணிகள் மற்றும் தரைச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதலுக்காக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தியாவின் பெங்களுர் (BLR) விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான பயணிகள் மற்றும் தரைச் சேவைகளை வழங்குவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமுறி செயன்முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்காக 03 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரையின் அடிப்படையில் கணிசமானளவு பதிலளிப்புக்களுடனான குறைந்தபட்ச விலைமனுதாரரான GlobeGround India Pvt. Ltd இற்கு இச்சேவை விநியோக ஒப்பந்தத்தை, 2026.04.01 தொடக்கம் 2029.03.31 வரைக்குமான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில் பாலியல் அத்துமீறல்கள்; கண்டுகொள்ளாத நிர்வாகம்; களமிறங்கிய சிஐடி!
அதன்படி 03 ஆண்டு காலப்பகுதிக்கு 3.093 மில்லியன் டொலர் தொகைக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது