நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன .
நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதற்கேற்றவாறு கொரோனா மரணங்களும் உயர்ந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினத்தின்படி கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கையில் 480 பேர் கூடுதலாக கணடறியப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனவால் நேற்றைய தினத்தில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 6 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 03 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.