உலக முடிவில் செல்பிக்கு ஆசைப்பட்ட மாணவிக்கு நேர்ந்த கதி; பதறவைத்த சம்பவம்!
நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி' எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து கீழா தவறி விழுதுள்ளார்.
இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த போது பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார் .

செல்பி' எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்த மாணவி
கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா, ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்த போதோ குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி செல்பி' எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி ஒருவர் பார்த்தவுடன் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து மாணவியை இழுத்து சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்தார்.

அதன் பின்னர் மாணவியை மீட்க பட்டிப்பொல பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் நாடினார். பல்கலைக்கழக மாணவியை பாதுகாக்க மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்ததாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்.