ஜனாதிபதி இல்லத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாருக்கும் ஆப்பு!
ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பிற இடங்களிலும் புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்வதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் இதனை நேற்று தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை ஏற்கனவே ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்தமை மற்றும் ஜனாதிபதியை கொடியை பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.