தபால் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
தபால் நிலையங்கள் திறக்கப்படும் தினங்களை மட்டுப்படுத்துவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய கொவிட் பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
வாரத்தில் 4 நாட்களுக்கு மாத்திரம் தபால் நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே, தபால் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தருபவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வருகைத் தந்து தபால் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு தபால்மா அதிபர் கேட்டுக்கொண்டார்.