நாட்டில் நிலவும் குழப்பங்களால் இலங்கையின் முயற்சிகள் பாதிக்கப்படலாம்; ரொய்ட்டர் தகவல்!
சமூக அமைதியின்மை அரசியல் நிச்சயமற்ற நிலைமை மற்றும் பல கடன் வழங்குநர்கள் காணப்படுவது போன்றவற்றின் காரணமாக 12 பில்லியன் டொலர் கடனை விரைவாக மாற்றியமைப்பதற்கான இலங்கையின் முயற்சிகள் பாதிக்க்கப்படலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் இலங்கை அரசாங்கம் மிகவேகமாக தனது வாய்ப்புகளை - தருணத்தை இழந்துகொண்டிருக்கின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் சீன இந்திய கடன்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பிணைமுறிகளும்,சர்வதேச நாணய நிதியம் காப்பாற்றும் என்ற பேச்சுவார்த்தைகளும் 1948 சுதந்திரத்தின் பின்னர் தென்னாசிய நாடு சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை வட்டியை செலுத்த தவறியதை தொடர்ந்து திங்கள் கிழமை எஸ் அன்ட் பி சர்வதேச தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையின் வெளிநாட்டு கடன் தரப்படுத்தலை செலுத்த தவறிய நாடாக மாறியுள்ளதாக அறிவித்தது.
கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உலக வங்கி 600 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்தது. அரசாங்கம் வட்டிவீதத்தை வரிகளை அதிகரிக்கவேண்டும், நெகிழ்ச்சி தன்மை கொண்ட நாணயமாற்று வீதத்தை பின்பற்றவேண்டும் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்தது. இலங்கை சீனாவுடன் கடன்மீளசெலுத்துததல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில் சர்வதேசநாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் சாதகமானவையாக காணப்படுகின்றன அவர்கள் தங்கள்அளவுக்குள் ஒரு திட்டத்தை முன்வைப்பார்கள் என்பதை நாங்கள் விளக்கிக்கொள்கின்றோம் என அமைச்சரவை பேச்சாளர் நாலககொடகேவ ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.
நாங்கள் இந்தியா உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் மேலதிக உதவிக்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்,ஆகவே சர்வதேச நாணயநிதியத்தின் உதவிகள் வரும்வரை நிலைமையை கையாளக்கூடிய நிலையில் இலங்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், நிதியமைச்சு கருத்துகூட மறுத்துவிட்டது.
அதேசமயம் 2019இல் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் வரிச்சலுகைகள் அரசாங்க கஜானாவை காலியாக்கியதாலும்,கொவிட், வருமானம் தரும் சுற்றுலாத்துறையை பாதித்ததாலும்,22 மில்லியன் மக்களின் பொருளாதாரம் சிதைவடைந்தது. கடந்த இரண்டு வருடங்களில் அந்நியசெலாவணி 70 வீதத்தினால் 1.93 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக கொழும்பு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக சிரமப்படவேண்டிய நிலைக்கு முகம் கொடுத்தது.
தொடர்ந்து நாட்டில் பற்றாக்குறைகளிற்கு மேலதிக பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கானவர்கள் ராஜபக்சவும் அவரது சகோதரரான பிரதமரும் பதவி விலகவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆறுமாதத்திற்குள் நிறைவுசெய்யலாம் என கொழும்பு எதிர்பார்க்கின்றபோதும், பேச்சுவார்த்தைகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அதனால் கட்டுப்படுத்த முடியாது. இந்நிலையில் ஆறுமாதங்கள் என்பது ஆசை எதிர்பார்ப்பு மாத்திரமே என தெரிவித்தார் பிக்டெட் நிறுவனத்தின் கைடோ சமோரோ (Guido Zamora).
பிக்டெட் நிறுவனம் இலங்கையின் பிணை முறிகளை வைத்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை இலங்கை முன்னர் அலட்சியம் செய்ததன் காரணமாக நிதி உதவியை வழங்குவதற்கு முன்னர் இலங்கை சீர்திருத்தங்களைமுன்னெடுக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் கோரப்போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் முதலீட்டாளர்கள் அவ்வளவு பொறுமையாகயிருக்க தயாரில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஆறு மாதங்களிற்கு காத்திருப்பது சாத்தியமில்லை என்றும், இலங்கையில் மிகவேமாக மாற்றமடைந்து வரும் நிலையை காண்கின்றோம் என அமுன்டி நிறுவனத்தின் ஜோ டெல்வோக்ஸ் (Joe Del Vox ) தெரிவித்தார்.
இலங்கையின் ஊடக அமைச்சரான கொடகேவ நிதி சட்ட ஆலோசகர்களை நியமிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு 50க்கும் அதிகமானவர்கள் விமர்சித்துள்ளதாகவும், அவர் நாங்கள் அவற்றை வேகமாக பரிசீலிப்போம் எனவும் குறிப்பிட்டார். அதேவேளை இலங்கை 3 பில்லியன் டொலர்நிதிஉதவியை கோருகின்றது-உலக வங்கியின் உறுதிமொழிக்கு அப்பால் இந்தியா 1.9 பில்லியன் டொலர்களை வழங்க தயார் என தெரிவித்துள்ளது. இதுதவிர எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்காக 1.5 பில்லியன் டொலர்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவுடன் இலங்கை முன்னெடுத்துள்ளது.
இலங்கையின் பேண்தகுநிலைமைக்கு அரசாங்கத்தின் சமீபத்தைய முடிவுகள் மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளன என தெரிவிக்கின்றார்-ஸ்டிவெல் நிறுவனத்தின் நட்டாலி மாசிக் (Natalie Magic).
நாணயத்தின் பெறுமதியை தரமிறக்கம் செய்தது-வட்டி வீதங்களை இரண்டுமடங்காக அதிகரித்தது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான 17வது திட்டத்தினை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை கொள்கை வகுப்பாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
எரிபொருள் சமையல் எரிவாயு விலை அதிகரிப்புகள் மக்களின் அதிகரித்துள்ளதால் வரிவிதிப்புகளை செய்வதற்கான எதிர்ப்புகள் காணப்படுகின்ற நிலையில இலங்கை எப்படி வருமானத்தை பெற்றுக்கொள்ளும் என்பது தெரியவில்லை.
இந்த நடவடிக்கைளால் நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என பிக்டெட்டின் சமோரோ தெரிவிக்கின்றார். சீனாவின் செல்வாக்கு வெளிப்படையாக தெரிகின்ற விடயம்,உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் இலங்கையில் பல உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.
சீனாவின் நிலைப்பாடே அரசாங்கத்தின் ஒரேயொரு கரிசனைக்குரிய விடயம் என தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர்,சீனாவுடனான எங்கள் நல்லுறவை நாங்கள் பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.