மத்திய வங்கி கையிருப்பு தொடர்பில் உண்மையை மூடிமறைத்த ஆளும் கட்சி!
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஆளுநர் பொறுப்பை ஏற்றபோது, வங்கியில் 20 மில்லியன் டொலர்களே வெளிநாட்டு ஒதுக்கங்களாக இருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவாக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற போது, மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டதாகவும் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஒருநாள் செலவுக்கு மாத்திரமே போதும்
உண்மையை கூறாத ஆளும் கட்சி இந்த தொகையானது, நாட்டின் ஒருநாள் செலவுக்கு மாத்திரமே போதுமான தொகை என்றும், எனினும் இந்த நிலைமையை அந்த நேரத்தில் ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தவில்லை எனவும் கூறினார்.
அத்துடன் நல்லாட்சி அரசாங்கம், பொதுஜன பெரமுனவுக்கு ஆட்சியை கையளிக்கும் போது மத்திய வங்கியில் 7800 மில்லியன் டொலர்களே இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்
லக்ஸ்மன் கிரியெல்ல கிரியெல்ல தெரிவித்துள்ளார்.