நாட்டில் உள்ள பிரதான வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் அவல நிலை
அவசரசிகிச்சை பிரிவுகளில் கட்டில்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் நிரம்பியுள்ளதால் சுகாதார தரப்பினர் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் புதிதாக பதிவாகும் நோயாளர்களை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
186 அவசர சிகிச்சை கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நோயாளர்களுக்கு 85 அவசர சிகிச்சை கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அவசர நிலையில் குறித்த 85 கட்டில்களிலும் ஒரு தொகையை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்க நேரிட்டுள்ளது.
இதனால் வேறு நோய்களால் அவசர சிகிச்சை பிரிசில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.