HMPV வைரஸ் குறித்து இலங்கையர்கள் அச்சம்கொள்ள வேண்டாம்!
இந்த நாட்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், சில சந்தர்ப்பங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட ஒரு வைரஸ் நிலை என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என வைரஸ் நோய்க்கான இலங்கை விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா சுட்டிக்காட்டியுள்ளார்.
சோதிக்க வேண்டிய அவசியமில்லை
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் ஜூட் ஜயமஹா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது வைத்தியர் ஜூட் ஜயமஹா HMPV வைரஸ் தொடர்பான அறிகுறிகளையும் விளக்கினார்.
பொதுவாக இருமல், சளி, இலேசான காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும், மேலும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு நிமோனியாவாக மாறலாம்.
ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது மற்றும் அனைவருக்கும் நடக்காது. இது உயிரிழப்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு. சில நாட்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் குணமடைகின்றனர்.
வைரஸ் உள்ளதா என்று சோதிக்க வேண்டிய அவசியமுமில்லை என தெரிவித்தார்.