அமெரிக்காவில் கோட்டாபய புதல்வர் வீட்டிற்கு முன் இலங்கையர்கள் போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) புதல்வர் மனோஜ் ராஜபக்ஷ (Manoj Rajapaksa), அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டுக்கு எதிரில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி கட்டாயம் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வீடுகளை கொள்வனவு செய்ய எப்படி பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கையர்கள் என்ற வகையில் அந்த பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே சுவீடன் நாடாளுமன்றத்திற்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கையர்கள் சிலர் நேற்று (09-07-2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.