மலேசியாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்; காரணத்தை வெளியிட்ட பொலிஸார்
மலேசியாவின் சென்டிலில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணவிவகாரம் உள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை முடிவடைந்துள்ளதாகவும், நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக நகரபொலிஸ் தலைமை ஆணையாளர் டட்டுக் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.
பணவிவகாரமும் கடன் விவகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம்
கொல்லப்பட்ட ஒருவரின் பெற்றோர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் உள்ளனர் என்றும் , பணவிவகாரமும் கடன் விவகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22 ம் திகதி சென்டில் உள்ள வீடொன்றில் மூவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட நிலையில், வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களும் உரிமையாளரும் மகனுமே சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.