ஈரான் சிறையில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
ஈரானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டு விரைவில் இலங்கை திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் இடையில் தெஹ்ரானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
மேலும், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள சபஹார் நகரைச் சேர்ந்த 9 ஈரானிய மாலுமிகள் இலங்கை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்நாட்டு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.