வெளிநாடுகளை நோக்கி செல்லும் இலங்கையர்களால் நாட்டிற்கு ஏற்படவுள்ள ஆபத்து!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது கணிக்கப்பட்ட அளவை விட குறையும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை தகவலை விடுத்துள்ளது.
அண்மையில் மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள் ஏற்றுமதித் துறையின் மீட்சியையும், திறன்மிக்க இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.
இதன் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது.
தற்போது கணிக்கப்பட்டுள்ளபடி, குறுகிய காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பொருளாதாரம் படிப்படியாக அதிக வளர்ச்சி நிலைக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.