தாய்லாந்திற்கு இலங்கையர்கள் விசா இல்லாது பயணிக்கலாம்!
தாய்லாந்து செல்லும் இலங்கைச் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை என்றும் 60 நாட்கள் வரை தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் தாய்லாந்து அரசாங்கம் புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது.
புதிய வீசா ஊக்குவிப்பு
அதனடிப்படையில், இலங்கையிலிருந்து வருகை தருபவர்கள் உள்ளிட்ட அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய வீசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்து அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கைச் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை என்றும் 60 நாட்கள் வரை தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை தருவதை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் எனவும், இந்த நடவடிக்கை ஜூன் 1, முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என தாய்லாந்து பேங்கொக் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்த மாற்றங்களுடன் விசா இல்லாத நுழைவுக்கான தகுதியான நாடுகளின் எண்ணிக்கை 57ல் இருந்து 93 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.