ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில்; யூன் 03 ஆம் திகதி வானில் நிகழவுள்ள அதிசயம்!
எதிர்வரும் ஜூன் மாதம் 3ல், கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி என்ற வரிசையில், ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை, பூமியில் இருந்து பார்க்கலாம் என வின்வெளி ஆய்வாளர்கல் கூறியுள்ளனர்.
அண்டத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில்
இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால், தொலை நோக்கிகள் மூலம் தெளிவாக பார்க்கலாம்.
அதேவேளை நமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு (பல நூறு கோடி கிலோ மீட்டர்) தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை.
அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது.
இதனை காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது. செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும்.
ஜூன் மாதம் 03 ஆம் திகதி சனிக்கோளுக்கு கீழேயும், 4ஆம் திகதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.