இலங்கையர்கள் இனி இந்த நாட்டுக்கு வீசா இல்லாது செல்லலாம்!
இலங்கையர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பது தொடர்பில் மலேசியா பரிசீலித்து வருகிறது.
மலேசிய அரசாங்கத்திடம், ஏற்கனவே இதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, புத்ரஜயாவில் உள்ள இலங்கைத் தூதுக்குழுவிடம், மலேசியா சுற்றுலா ஊக்குவிப்பு சபையின் ஆசிய மற்றும் ஆபிரிக்காவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை ஊடகங்களின் பிரதிநிதிகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆண்டு மலேசியாவுக்கு, இலங்கையர்களின் வருகை 122 சதவீதத்தால் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமது நாட்டுக்கு, இலங்கையிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிப்பதும் இந்த முயற்சியின் நோக்கமாகும் என மலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு சபையின் ஆசிய மற்றும் ஆபிரிக்காவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.