மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன்; தலாய்லாமா
தான் மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன் என திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
தனது வாரிசை கண்டுபிடித்து கடந்தகாலபௌத்த மரபுகளின்படி அங்கீகரிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலாய்லாமா என்ற கட்டமைப்பு தொடரும் என அமைதிக்கான நோபல்பரிசை வென்ற திபெத்தின் ஆன்மீக தலைவர் தெரிவித்துள்ளார்.
தலாய்லாமா என்ற கட்டமைப்பு தொடரும்
சீனாவிற்கான செய்தியில் தலாய்லாமா தனக்கு பின்னர் ஒருவரை கண்டுபிடித்து அவரை அங்கீகரிக்கும் பொறுப்பு 2015 இல் தான் உருவாக்கிய அமைப்பிற்கே உரியது என குறிப்பிட்டுள்ளார்.
வேறு எவருக்கும் இந்த விடயத்தில் தலையிட உரிமையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்தகால பாரம்பரியங்களிற்கு ஏற்ப எதிர்கால தலாய்லாமாவை தேடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீனா தலாய்லாமாவிற்கு பின்னர் யார் என்பதை சீன அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த தலாய் லாமா திபெத்திலிருந்து வர வேண்டிய அவசியமில்லை என சீன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சீனானின் நிலைப்பாடு
தலாய்லாமாவின் இந்த முடிவு சீனாவை சீற்றத்திற்குள்ளாக்கும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் அடுத்த மதத் தலைவரை அங்கீகரிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என்று சீனா பலமுறை தெரிவித்துள்ளது.
மறுபிறவி எடுத்த நபர் சீனாவின் திபெத்திய பகுதிகளில் காணப்பட வேண்டும் என்றும் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்துகிறது.
திபெத்திய மதத் தலைமை மூத்த லாமாக்களுடன் கலந்தாலோசித்தல் மற்றும் பாரம்பரிய ஜோசியம் மூலம் தனது மறுபிறவியை அடையாளம் காணும் பண்டைய செயல்முறையை மேற்கொள்ளும் என்பதை பகிரங்கமாக மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம் தலாய் லாமா ஆன்மீக நியாயத்தன்மையையும் திபெத்திய சுயாட்சியையும் வலுப்படுத்த முயன்றுள்ளார்.
அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்க விரும்புவதாக பெய்ஜிங் நீண்ட காலமாக சமிக்ஞை செய்து வருகிறது .
இதன்காரணமாக சீனாவுடன் இணங்கிபோகக்கூடிய ஆன்மீக தலைவர் குறித்து திபெத்தில் அச்சம் காணப்படுகின்றtஹாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.