உலக சாதனைக்காக இலங்கை இளைஞரின் அதிபயங்கர முயற்சி
உலக சாதனைக்காக மாத்தளை இளைஞர் ஒருவர் தற்போது அதிபயங்கர முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளையை சேர்ந்த 36 வயதான மொஹமட் முசாதிக் என்ற நபர் பூமியில் ஆறடி குழிக்குள் சென்று மண்ணினால் மூடப்பட்டு அதன் மீது தீயினை மூட்டி சுமார் 6 மணிநேரம் தூங்கி எழுந்துவரும் சாதனைக்காக தற்போது தயாராகி வருகிறார்.
இது குறித்து அந்த இளைஞன் கூறியதாவது,
உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே இந்த சாதனை செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதற்காக நண்பர்களுடன் பலமுறை பயிற்சி செய்துள்ளேன். இது சிறுவயது முதலே தனது குறிக்கோளாக கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இவர் மாத்தளை பகுதி ஒன்றில் ஆறடி குழிக்குள் சென்று மண்ணினால் மூடப்பட்டு தீயூட்டப்பட்டு சுமார் 2 மணிநேரம் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.