கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கைப் பெண்கள்
சட்ட விரோதமான முறையில் சுற்றுலா வீசாக்கள் மூலம் வெளிநாடு சென்றுள்ள அனைத்துப் பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக பணியக சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் இயங்கும் சுரக்ஷா பாதுகாப்பு விடுதியில் தங்கியுள்ள இலங்கைப் பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 24ம் திகதி வந்த முதலாவது குழுவில் 8 பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
தூதரகத்தில் சட்டரீதியாக பதிவுகளை மேற்கொள்ளாமல்
சுற்றுலா வீசா மூலம் தொழில் நிமித்தம் ஓமான் சென்ற 18 பேர்
நிர்க்கதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.